<< May 2012 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01 02 03 04 05
06 07 08 09 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31

Add text or HTML here

If you want to be updated on this weblog Enter your email here:



rss feed



Sep 12, 2006
குயிலுக்குள் ஒளிந்திருக்கும் மயில்!

 



எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல்.....
நளினம் கொஞ்சும் நந்தவனம்!

குயிலுக்குள் ஒளிந்திருக்கும் மயில்!

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல்....
காற்றின் மேடையிலே
நர்த்தன அற்புதம் நிகழ்த்தும்
ராக வசீகரம்!

- - -


எஸ்.பி.பாலசுப்ரமணியம்....
மாணிக்க கங்கையாய்
ரசிக மனங்களைப் பொங்க வைக்கும்
சங்கீத வரம்!

கற்கண்டு கொண்டு தூரிகை செய்து.....
அதைத் தேனிலே நனைத்தெடுத்து...
வான் அலைகளில் வரையப்படும்
ராக ஓவியம்!
- - -


எஸ்.பி.பாலசுப்ரமணியம்....

இசையமைப்பாளர்களின்
ராகத் தேரில் நின்றபடி ...
அவர்களே எதிர்பாராத
குயில் அற்புதங்களை
நிகழ்த்திக் காட்டும்
சித்த புருஷர்.....சிங்கார அரசர்!

                                            -யாழ் சுதாகர்



Posted at 08:51 pm by yazhsuthakar
Make a comment  



band booking agent